யுகாதி பஞ்சாங்கம் வாசிப்பு
ADDED :3112 days ago
பழநி, தெலுங்கு வருடபிறப்பு யுகாதியை முன்னிட்டு பெரிய நாயகியம்மன் கோயிலில் முத்துகுமாரசுவாமிக்கு அபிஷேகமும், வெள்ளிக் கவச அலங்காரத்தில் தீபாராதனையும் நடந்தது. அதன்பின் சன்னதி மண்டபத்தில் பஞ்சாங்கதிதி, வாரம், நட்சத்திரம், யோகம், கரணம் ஆகிய ஐந்து பகுதிகளை செல்வ சுப்ரண்யா சிவாச்சாரியார் வாசித்தார். மதுரை கலைஞர் வடிவேலுவின் கட்டைக்கால் நடனம், சாகச நிகழ்ச்சியும், மாணவர்களின் கலைநிகழ்ச்சிகளும் நடந்தன. பக்தர்கள் கலந்துகொண்டனர்.