உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கன்னிகா பரமேஸ்வரி கோவிலில் யுகாதி பூஜை

கன்னிகா பரமேஸ்வரி கோவிலில் யுகாதி பூஜை

திண்டிவனம்: திண்டிவனத்திலுள்ள கன்னிகாபரமேஸ்வரி கோவிலில், யுகாதி சிறப்பு பூஜை நடந்தது. தெலுங்கு வருட பிறப்பை(யுகாதி) முன்னிட்டு, திண்டிவனம் கன்னிகாபரமேஸ்வரி கோவிலில், அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது. பூஜையில் பங்கேற்றவர்களுக்கு சிறப்பு கஷாயம் வழங்கினர். மாலையில் அம்மனுக்கு சிறப்பு அர்ச்சனை நடந்தது. சுரேஷ் அய்யர் மூலம் பஞ்சாங்கம் படிக்கப்பட்டது. நிகழ்ச்சியில், கன்னிகாபரமேஸ்வரி அம்மன் கோவில் டிரஸ்ட் செயலர் ரங்கமன்னார், இயக்குநர் சீனுவாசன், வாசவி கிளப் துணை இயக்குநர்கள் சிவக்குமார், வெங்கட்ரமணன், சங்கர், வட்டாரத் தலைவர் பிரபாகரன், மாவட்ட தலைவர்கள் வைத்தீஸ்வரன், ஸ்ரீகரன், வாசவி கிளப் நிர்வாகிகள் நடராஜன், நாகராஜன், கார்த்திகேயன், வனிதா கிளப் நிர்வாகிகள் ஜெயந்தி, பாரதி, நிர்மலா உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !