உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காட்டுவனஞ்சூரில் ஸ்ரீராம நவமி விழா

காட்டுவனஞ்சூரில் ஸ்ரீராம நவமி விழா

சங்கராபுரம்: சங்கராபுரம் அடுத்த காட்டுவனஞ்சூரில் ஸ்ரீராம நவமிவிழா இன்று துவங்குகிறது. சங்கராபுரம் அடுத்த காட்டுவனஞ்சூரில் 40ம் ஆண்டு ஸ்ரீராம நவமி விழா இன்று துவங்கி, 3 நாட்கள் நடக்கிறது. நிகழ்ச்சியில் சென்னை, கோவை, மாயவரம், கும்பகோணம், திருச்சி, திருவண்ணாமலை, பெங்களூரு, நெய்வேலி, ஸ்ரீரங்கம் ஆகிய ஊர்களை சேர்ந்த 40 பாகவதர்கள் பங்கேற்கின்றனர். ஏற்பாடுகளை காட்டுவனஞ்சூர் ராமபக்த மண்டலி தலைவர் வெங்கடேச பாகவதர் செய்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !