உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மணிமங்கலத்தில் மஹா கும்பாபிஷேக விழா

மணிமங்கலத்தில் மஹா கும்பாபிஷேக விழா

மணிமங்கலம்: மணிமங்கலத்தில் அமைந்துள்ள, ஸ்ரீதேவி கருமாரி அம்மன் கோவில் மஹா கும்பாபிஷேக விழா நேற்று முன்தினம் நடந்தது. ஸ்ரீபெரும்புதுார் அருகே மணிமங்கலம் ஊராட்சி, பாரதி நகர் பகுதியில் ஸ்ரீதேவி கருமாரி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் அண்மையில் புதுப்பித்து, கற்பகிரஹம், அர்த்த மண்டபம், மஹா மண்டபம், விமானம் கட்டி முடிக்கப்பட்டது. இதை அடுத்து, கோவிலின் மஹா கும்பாபிஷேக விழா, 27ம் தேதி கணபதி ஹோமம், நவக்கிரஹ ஹோமம், கோ பூஜையுடன் துவங்கியது. இதைத் தொடர்ந்து ஆறு கால யாக பூஜைகள் செய்யப்பட்டு, நேற்று முன்தினம் காலை, கோவிலின் கோபுர கலசங்களில் புனித நீர் ஊற்றி ஸ்ரீதேவி கருமாரி அம்மன் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு மஹா கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !