உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்பதிக்கு 700 கிலோபுஷ்பம் அனுப்பி வைப்பு!

திருப்பதிக்கு 700 கிலோபுஷ்பம் அனுப்பி வைப்பு!

சேலம்:சேலம் திருமலை திருவேங்கடமுடையான் நித்ய புஷ்ப கைங்கர்ய சபா அறக்கட்டளை சார்பில் திருப்பதியில் நடக்கும் புஷ்ப யாகத்துக்கு, நேற்று, 700 கிலோ புஷ்பம் அனுப்பி வைக்கப்பட்டது.சேலம் திருமலை திருவேங்கடமுடையான் நித்ய புஷ்ப கைங்கர்ய சபா அறக்கட்டளை மேனேனிங் டிரஸ்டி நாகப்பன் தலைமையில், திருப்பதிக்கு தினம் தோறும் புஷ்பம் பல ஆண்டுகளாக அனுப்பி வைக்கப்படுகிறது. திருமலை திருப்பதியில் நடக்கும் முக்கிய விசேஷ நாட்களில், கூடுதலாக புஷ்பம் அனுப்பி வைக்கப்படுகிறது. இன்று (3ம் தேதி) திருப்பதியில் புஷ்ப யாகம் நடக்கிறது.இதற்காக புஷ்ப கைங்கர்ய சபா சார்பில், சேலத்தில் இருந்து, 200 கிலோ சாமந்தி, 100 கிலோ அரளி, 2,000 பெங்களூரு ரோஸ், 100 கிலோ துளசி, மருகு 50 கிலோ, சம்பங்கி, 100 கிலோ என, மொத்தம், 700 கிலோ புஷ்பங்கள், தனி லாரி மூலம் அனுப்பி வைக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !