உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / எமனேஸ்வரமுடையார் கோயிலில் திருவாசகம் முற்றோதல் விழா

எமனேஸ்வரமுடையார் கோயிலில் திருவாசகம் முற்றோதல் விழா

பரமக்குடி: எமனேஸ்வரமுடையார் கோயிலில் திருவாசக சித்தர் திருக்கழுக்குன்றம் சிவதாமோதரன் தலைமையில் திருவாசகம் முற்றோதல் விழா நடந்தது. தொடர்ந்து காலை 7:௦௦ மணி முதல் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்து. ஆயிரக்கணக்கான சிவ பக்தர்கள் புடைசூழ திருவாசக பாடல்கள் பாடி மகிழ்ந்தனர். காலை முதல் இரவு வரை பக்தர்கள் பலரும் சுவாமி தரிசனம் செய்து திருவாசகத்தை கேட்டனர். மேலும் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !