உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்பூர் அண்ணாமலையார் கோவில் கும்பாபிஷேகம்

திருப்பூர் அண்ணாமலையார் கோவில் கும்பாபிஷேகம்

திருப்பூர்: திருப்பூர், இடுவாய், திருமலை கார்டனில் உள்ள உண்ணாமுலை அம்பிகை சமேத அண்ணாமலையார் கோவில் கும்பாபிஷேகம், கோலாலகமாக நடந்தது.  கோல் திருப்பணி நிறைவுற்ற நிலையில், கும்பாபிஷேக விழா, கடந்த, 30ல் துவங்கியது. கோவிலருகே யாகசாலை அமைக்கப்பட்டு, நான்கு கால யாக பூஜைகள் நடந்தன. நேற்று பிம்பசுத்தி ரக்ஷாபந்தனம், நாடிசந்தானம், ஸ்பர்சாகுதியும், தொடர்ந்து, யாத்ராதானம், கலச புறப்பாடு ஆகியன நடந்தது.யாகசாலையில், பூஜிக்கப்பட்ட கும்பங்களை, சிவாச்சார்யார்கள் பிரகார உலாவாக எடுத்து சென்று, கோபுரம் மற்றும் மூலவ மூர்த்திகளுக்கு கும்பாபிஷேகம் செய்தனர். கும்பாபிஷேக பூஜைகளை, கார்த்திகேய சிவம் சர்வசாதகம் செய்து நடத்தி வைத்தார். திருப்பூர் சிவனடியார் திருக்கூட்டத்தின், சிவகண பூத வாத்தியம் இசைத்தனர். விழாவில், பங்கேற்ற பக்தர்களுக்கு, கோவில் கமிட்டி சார்பில், அன்னதானம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !