உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அகத்தீஸ்வரர் கோவிலில் பிரம்மோற்சவம் துவக்கம்

அகத்தீஸ்வரர் கோவிலில் பிரம்மோற்சவம் துவக்கம்

பொன்னேரி: அகத்தீஸ்வரர் கோவிலில், பிரம்மோற்சவத்தை முன்னிட்டு, கொடியேற்றம் நிகழ்ச்சி நடைபெற்றது. பொன்னேரி,  ஆனந்தவல்லி அம்மை வலம்கொண்ட அகத்தீஸ்வரர் கோவிலில், பங்குனி பிரம்மோற்சவ விழா, நேற்று முன்தினம் துவங்கியது.  கிராமதேவி எட்டியம்மனுக்கு சிறப்பு பூஜைகளுடன், பிரம்மோற்சவ விழா நடந்தது. நேற்று, காலை , 8:00 மணிக்கு சிவாச்சாரியார்கள்  மந்திரம் முழங்கி, பிரம்மோற்சவ கொடியேற்றமும், அதை தொடர்ந்து, காலை, 11:00 மணிக்கு, பஞ்சமூர்த்திகள் வீதிஉலாவும்  நடைபெற்றது. வெகு விமரிசையாக நடந்த முதல் நாள் உற்சவத்தில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, அகத்தீஸ்வர பெருமானைவணங்கி சென்றனர். இன்று, காலை, 7:00 மணிக்கு, சூரிய பிரபையும், இரவு, 8:30 மணிக்கு, சிம்ம வாகனமும் நடைபெற உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !