உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பழநியில் 230 பேர் தங்கரதம் இழுத்து வழிபாடு

பழநியில் 230 பேர் தங்கரதம் இழுத்து வழிபாடு

பழநி: பழநி மலைக்கோயிலில் நேற்று ஒரே நாளில் 230 பேர் தங்க ரதம் இழுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.இக்கோயிலில் தினமும் இரவு 7:00 மணிக்கு தங்கரதம் புறப்பாடாகிறது. ரூ.௨ ஆயிரம்கட்டணம் செலுத்த வேண்டும். ஒரு டிக்கெட்டிற்கு 3 பேர் தங்க ரதம் இழுக்கலாம். ஒரு நாளைக்கு எத்தனை பேர் பணம் செலுத்தியிருந்தாலும், தங்க ரதம் ஒருமுறை மட்டுமே வெளிப்பிரகாரத்தை வலம் வரும்.பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு தங்க ரத புறப்பாடு ஏப்.,7 முதல் 11 வரை 5 நாட்கள் நிறுத்தப்படும். இதனால் நேற்று ஒரே நாளில் 230 பேர் தங்க ரதம் இழுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !