காட்டுவனஞ்சூரில் சீதா கல்யாண உற்சவம்
ADDED :3223 days ago
சங்கராபுரம்: சங்கராபுரம் அடுத்த காட்டுவனஞ்சூரில் சீதா கல்யாண உற்சவம் நடந்தது. காட்டுவனஞ்சூரில், 40ம் ஆண்டு ராமநவமி உற்சவம், 3 நாட்கள் நடந்தது. நேற்று சீதா கல்யாண வைபவம் நடந்தது. சென்னை கோபி பாகவதர், புதுச்சேரி பாலு பாகவதர், கான்பூர் மகாதேவ பாகவதர், திருவண்ணாமலை கணேஷ் பாகவதர், ரங்கநாத பாகவதர், மாயவரம் ஞானகுரு பாகவதர், நெய்வேலி பாலாஜி பாகவதர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, வழிபட்டனர். ஏற்பாடுகளை வெங்கடேச பாகவதர் செய்திருந்தார்.