ஸ்ரீபெரும்புதுாரில் ராமானுஜருக்கு திருமஞ்சனம்
ADDED :3147 days ago
ஸ்ரீபெரும்புதுார்: திருவாதிரை திரு நட்சத்திரத்தை முன்னிட்டு, ஸ்ரீபெரும்புதுாரில் ராமானுஜருக்கு நேற்று விசேஷ திருமஞ்சனம் செய்யப்பட்டது. ஸ்ரீபெரும்புதுாரில் ஆதிகேசவப்பெருமாள் மற்றும் பாஷ்யகார சுவாமி கோவில் உள்ளது. இங்கு, ராமானுஜர் தானுகந்த திருமேனியாக பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். இங்கு, மாதம்தோறும் திருவாதிரை திருநட்சத்திரம் அன்று ராமானுஜருக்கு விசேஷ திருமஞ்சனம் நடத்தப்படுகிறது. நேற்று, திருவாதிரை திருநட்சத்திரத்தை முன்னிட்டு, ராமானுஜர் உற்சவருக்கு திருமஞ்சனம் மற்றும் அபிஷேகம் செய்யப்பட்டது. இதில் பல பகுதிகளில் இருந்து வந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வழிபட்டு சென்றனர்.