திருவதிகை பெருமாள் கோவிலில் ஸம்பத்ஸ்ர உற்சவம் துவக்கம்
ADDED :3147 days ago
பண்ருட்டி: பண்ருட்டி அடுத்த திருவதிகை சரநாராயண பெருமாள் கோவிலில் ஸம்பத்ஸ்ர உற்சவம் நேற்று துவங்கியது. சரநாராயண பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் நடந்து ஓராண்டு நிறைவு விழா, மற்றும் ராமானுஜர் ஆயிரமாவது ஆண்டு விழாவை முன்னிட்டு, ஸம்பத்ஸ்ர உற்சவம் நேற்று துவங்கியது. காலை 9:00 மணிக்கு, நித்ய ஹோமம், 40 ஆயிரம் ஆவர்த்தி, பகல் 12:00 மணிக்கு, ஹோமம், தீபாராதனை நடந்தது. மாலை 4:00 மணிக்கு, இரண்டாம் கால ஹோமம், நித்ய ஹோமம், 30 ஆயிரம் ஆவர்த்தி நடந்தது.இன்று (4ம் தேதி) காலை 8:00 மணிக்கு, நித்ய ஹோமம், 30 ஆயிரம் ஆவர்த்தி ஹோமம், காலை 10:00 மணிக்கு, பெரிய பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம், பகல் 12:00 மணிக்கு, தீர்த்த பிரசாதம் வழங்கப்படுகிறது. மாலை 6:00 மணிக்கு, உற்சவர் பெருமாள், உபய நாச்சியாருடன், புஷ்ப பல்லக்கில் மாட வீதி புறப்பாடு நடக்கிறது.