உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மழை வேண்டி கிடா வெட்டி பூஜை தண்டு மாரியம்மன் கோவிலில் பரவசம்

மழை வேண்டி கிடா வெட்டி பூஜை தண்டு மாரியம்மன் கோவிலில் பரவசம்

குன்னுார் : குன்னுார் அருகே, எல்லநள்ளி பகுதியில் உள்ள தண்டு மாரியம்மன் கோவிலில், மழை வேண்டி, கிடா வெட்டி சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன. குன்னுார் - ஊட்டி சாலையில், எல்லநள்ளி அருகே எல்லை தண்டுமாரியம்மன் கோவில் உள்ளது. இங்கு, 34வது ஆண்டு விழா துவங்கியது. 31ம் தேதி விநாயகர் மற்றும் அம்மனுக்கு அபிேஷக பூஜை, விழா கொடியேற்றம், ராகு கால பூஜை, ஆகியவை நடந்தன. தொடர்ந்து, கரக உற்சவம், அக்னிசட்டி ஏந்தி, கோவிலில் வழிபாடு நடத்தப்பட்டது. நள்ளிரவு, 12:00 மணிக்கு மகாசக்தி ஹோமம் நடந்தது. நேற்று முன்தினம், காலை, 6:00 மணி முதல் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு, 70 கிடாக்கள் வெட்டப்பட்டு பூஜைகள் நடத்தப்பட்டன. தொடர்ந்து, ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. தற்போது, நீலகிரியில் கடும் வறட்சி நிலவும் நிலையில், மழை பெய்ய வேண்டி கிடா வெட்டி சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன. இதற்கு, விழாகுழு தலைவர் நாராயணசாமி தலைமை வகித்தார். கோவில் குழுவின் வைத்தியராமன், வைத்தியலட்சுமி முன்னிலை வகித்தனர். இன்று அம்மன் கரகம் கங்கை சேர்த்தல், மஞ்சள் நீராடலுடன் விழா நிறைவு பெறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !