மழை வேண்டி காளி அம்மனுக்கு சிறப்பு வழிபாடு
ADDED :3148 days ago
மேல்மலையனுார்: மேல்மலையனுார் தாலுகா பரையம்பட்டு கிராமத்தில் மழை பொய்த்ததால், கிணறுகள், ஏரிகள் வறண்டு குடிநீருக்கு மக்கள் அவதிப்படுகின்றனர். இதனால் கிராம மக்கள் ஒன்று கூடி மழை வளம் வேண்டி, 108 பால் குடங்களை ஊர்வலமாக எடுத்து சென்று, காளி அம்மனுக்கு சிறப்பு பாலாபிஷேகம் செய்தனர்.