உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / உச்சிஷ்ட கணபதி கோவிலில் ராம நவமி விழா துவக்கம்

உச்சிஷ்ட கணபதி கோவிலில் ராம நவமி விழா துவக்கம்

புதுச்சேரி: ஆர்ஷ வித்யா பவன் சார்பில், ஒதியம்பட்டு நீலசரஸ்வதி சமேத உச்சிஷ்ட கணபதி சுவாமி கோவிலில், ராம நவமி விழா நேற்று துவங்கி, ௫ம் தேதி வரை நடக்கிறது. இதனையொட்டி, தினமும் மாலை தத்வபோதாந்த சரஸ்வதி சுவாமிகளின் சிறப்பு உபன்யாச நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, ராமாயணத்தில் நீர் கடன் என்ற தலைப்பில் அவர் பேசியதாவது: நமது தர்மத்தில் ராமாயணம், மகாபாரதம் இரண்டு இதிகாசங்களும், சிறப்பு வாய்ந்ததாக கருத்தப்படுகிறது. அதன், ஆசிரியர்களான வால்மீகி, வியாசகர், அந்த கதாபாத்திரங்கள் வாழ்கின்றபோதே, அவர்கள் இந்த வரலாற்றை இயற்றி உள்ளனர். எனவே, அதில் வாழ்கையின் உயர் தத்துவம் நிறைந்திருக்கிறது. தசரதர் என்ற அரசர் பலசாலியாகவும், வீர தீர செயல்கள் புரிந்தவராகவும் காட்டப்படுகிறார். 10 திசைகளில் தன்னுடைய ரதத்தை செலுத்துபவராக அறிமுகப்படுத்தப்படுகிறார். ஓசை வருகின்ற திசையை வைத்து அம்பு எய்து இலக்கை தாக்க கூடிய சாமர்த்தியம் அவரிடம் இருந்ததால், தவறுதலாக, யானை என்று நினைத்து ஸ்வரணகுமாரனுடை மரணத்திற்கு காரணம் ஆகிறார். அதன் மூலம் புத்திர சோகத்தினால் மரணம் என்ற சாபத்தை பெறுகிறார். அது அவருடைய வரமாக ஒரு குழந்தைக்கு பதில், 4 குழந்தைகளுக்கு தகப்பனாக ஆகிறார். சாபத்தின் படி, ராமர் பிரிவதன் மூலம் தசரதர் உயிர் துறக்கிறார். அவர் செய்த நீர் கடன், ஸ்வரணகுமாரனுக்கு பலனாகவும், ஸ்வரணகுமரனுடைய பெற்றோர்களுக்கு சாபமாகவும் அமைந்து விடுகிறது. இவ்வாறு தத்வபோதாந்த சரஸ்வதி சுவாமிகளின் உபன்யாசம் செய்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !