உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / எஸ்.வி.ஜி.புரத்தில் பிரம்மோற்சவம்

எஸ்.வி.ஜி.புரத்தில் பிரம்மோற்சவம்

ஆர்.கே.பேட்டை: சந்தான வேணுகோபால சுவாமி கோவிலில், வரும் 12ம் தேதி கொடியேற்றத்துடன் பிரம்மோற்சவம் துவங்குகிறது. வரும் 20ம் தேதி சக்கர ஸ்தானத்துடன் விழா நிறைவு பெறுகிறது. தினமும் பல்வேறு வாகனங்களில் உற்சவர் வீதியுலா எழுந்தருளுகிறார். ஆர்.கே.பேட்டை அடுத்த, எஸ்.வி.ஜி.புரத்தில் அமைந்துள்ளது சந்தான வேணுகோபால சுவாமி கோவில். மூலவர் சந்தான வேணுகோபால சுவாமி, பசுவின் மீது சாய்ந்து நின்றபடி வேணு கானம் இசைக்கும் கோலத்தில் அருள்பாலிக்கிறார். மார்கழி உற்சவம், நித்ய பூஜைகள் நடந்து வருகின்றன. சித்திரை பிரம்மோற்சவமும் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. வரும் 12ம் தேதி, காலை 9:30 மணிக்கு, கொடியேற்றத்துடன் பிரம்மோற்சவம் துவங்குகிறது. மாலையில் அம்ச வாகனத்தில் உற்சவர் பெருமாள் வீதியுலா எழுந்தருளுகிறார்.தினமும் சிம்மம், அனுமந்த, சேஷ வாகனம் என, பல்வேறு வாகனங்களில் எழுந்தருளும் உற்சவர், 16ம் தேதி ஞாயிற்றுக்கிழமை கருட வாகனத்தில் வீதியுலா வருகிறார். வரும் 19ம் தேதி, காலை, தேரில் உலா வரும் சுவாமி, மாலையில் குதிரை வாகனத்தில் எழுந்தருளுகிறார். 20ம் தேதி காலை, சக்கர ஸ்தானத்துடன் விழா நிறைவு பெறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !