உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிவ - விஷ்ணு கோவிலில் திருக்கல்யாண உற்சவம்

சிவ - விஷ்ணு கோவிலில் திருக்கல்யாண உற்சவம்

திருவள்ளூர்: சிவ - விஷ்ணு கோவிலில், வரும் 9ம் தேதி, பங்குனி உத்திர திருக்கல்யாண உற்சவம் நடைபெறுகிறது.திருவள்ளூர், பூங்கா நகரில் உள்ள சிவ - விஷ்ணு கோவிலில், பங்குனி உத்திரத்தை முன்னிட்டு, வரும் 9ம் தேதி, திருக்கல்யாண உற்சவம் நடைபெறுகிறது. காலை, 10:30 மணிக்கு மேல், மதியம் 12:00 மணிக்குள், பூங்குழலி அம்பிகைக்கும், புஷ்பவனேஸ்வரருக்கும், பத்மாவதி தாயாருக்கும், சீனிவாச பெருமாளுக்கும் தெய்வீக திருக்கல்யாண வைபவம் நடைபெறுகிறது. மேலும், சுப்ரமணிய சுவாமிக்கு, விசேஷ அபிஷேக அலங்கார ஆராதனை நடைபெறும். மேலும், காலை, 9:00 மணி முதல், மூலவர் அபிஷேகம், விநாயகர் பிரார்த்தனை, கலச பூஜை, பாத பூஜை, மாலை மாற்றுதல், கன்னிகாதானம், திருமாங்கல்ய தானம், சப்தபதி லாஜ ஹோமம், மங்கள ஆரத்தியும் நடைபெறும். மாலை, 4:00 மணிக்கு, விசேஷ புஷ்ப அலங்காரத்துடன் வீதி உலா நடைபெறும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !