வைகுண்டவாசப் பெருமாள் கோவிலில் ராமநவமி சிறப்பு அபிஷேகம்
ADDED :3146 days ago
கோயம்பேடு : கோயம்பேடு கனகவல்லித் தாயார் சமேத வைகுண்டவாசப் பெருமாள் கோவிலில், ராமநவமியை முன்னிட்டு, நேற்று சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. ராமபிரான் அவதரித்த நாள், ராமநவமியாக கொண்டாடப்படுகிறது. நேற்று, ராமநவமி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. கோயம்பேட்டில், கனகவல்லித் தாயார் சமேத வைகுண்டவாசப் பெருமாள் கோவில் உள்ளது. இங்கு ராமநவமி விழாவை முன்னிட்டு, நேற்று சிறப்பு பூஜைகள் மற்றும் அபிஷேகம் நடைபெற்றன. விழாவையொட்டி காலை, 10:00 மணிக்கு, ராமருக்கு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து ராமநவமி உற்சவம் துவங்கியது. விழாவில், திரளான பக்தர்கள் பங்கேற்றனர். மாலையில் திருவீதி புறப்பாடு நடைபெற்றது. விழாவை முன்னிட்டு, இன்று, 6:45 மணிக்கு, திருக்கல்யாணம், அக்னி பிரதிஷ்டை ஆகிய நிகழ்ச்சிகள் நடக்கின்றன.