கரிவரதராஜர் கோவிலில் பிரம்மோற்சவம் துவக்கம்
ADDED :3146 days ago
பெ.நா.பாளையம் : பெரியநாயக்கன்பாளையம் கரிவரதராஜ பெருமாள் கோவிலில், 10 நாள் பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவையொட்டி, கருடாழ்வாருக்கு அபிஷேகம் நடந்தது. கருடக் கொடி கோவில் வளாகத்தில் உள்ள சன்னிதியை சுற்றி ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு கம்பத்தில் ஏற்றப்பட்டது. மாலையில், பெருமாள் சரஸ்வதி அலங்காரத்தில் அன்னவாகத்தில் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நேற்று மாலை, பெருமாள் சிம்ம வாகனத்தில் எழுந்தருளினார். இன்று முத்துபந்தலில் எழுந்தருளுகிறார். முக்கிய நிகழ்ச்சியான கருடசேவை வைரமுடி சேவை சனிக்கிழமை நடக்கிறது.