உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பெரியகுளத்தில் ராமநவமி சிறப்பு பூஜை

பெரியகுளத்தில் ராமநவமி சிறப்பு பூஜை

பெரியகுளம்: பெரியகுளத்தில் ராமநவமியை முன்னிட்டு நாமத்வார் பிரார்த்தனை மையத்தில், பள்ளி எழுச்சி ஹரே ராமநாமகீர்த்தனத்துடன் நிகழ்ச்சி துவங்கியது. ராமருக்கு திருமஞ்சனம் பூஜை, 70 கோடி ராமநாமத்திற்கு சிறப்பு பூஜை மற்றும் துளசி பூஜை நடந்தது. பக்தர்கள் ராமநாமத்துடன் வீதி உலா சென்றனர். மதுரகீதம் பஜனை நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கிருஷ்ணசைதன்யதாஸ் மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.

* பெரியகுளம் ஷீரடி சாய்பாபா கோயிலில், ராமநவமி மற்றும் ஸ்ரீ ஷீரடி சாய்பாபாவின் ஜெயந்திவிழா நடந்தது. ஆரத்தி, விக்னேஷ்வர பூஜை, சங்கல்பம், தன்வந்திரி ஹோமம் மற்றும் சாயிஅஷ்டோத்ர ஹோமம், மகாஅபிஷேகம், கும்ப அபிஷேகம், விஷ்ணு ஸஹஸ்ரநாமம் மற்றும் சாயி ஸஹஸ்ரநாமம் பாராயணம் நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை எம்.எம்.பி.டி., டிரஸ்ட் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.
*தேனி பஞ்சமுக ஆஞ்சநேயர் கோயிலில் ராமர், அனுமனுக்கு சிறப்பு பூஜை நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !