கோட்ட ஆறுமுக சுவாமி கோவில் கும்பாபிஷேகம்
திருத்தணி : கோட்டா ஆறுமுகசுவாமி கோவில் கும்பாபிஷேகம், வரும், 10ம் தேதி, நடைபெறுகிறது. திருத்தணி முருகன் கோவிலின் உபகோவிலான கோட்டா ஆறுமுகசுவாமி கோவில், திருத்தணி, நந்தி ஆற்றின் கரையோரம் உள்ளது. இக்கோவிலின் மகா கும்பாபிஷேக விழா, வரும், 8ம் தேதி, காலை 8.30 மணிக்கு, விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம், நவக்கிரஹ ஹோமம், மற்றும் தனபூஜையுடன் விழா துவங்குகிறது. வரும், 9ம் தேதி, காலை, 9:00 மணிக்கு, இரண்டாம் கால பூஜையும், மாலை, 3:00 மணிக்கு அஷ்டபந்தனம், சமர்ப்பணம், மாலை, 6:00 மணிக்கு மூன்றாம் கால பூஜையும் நடைபெறுகிறது. தொடர்ந்து, ஏப்., 10ம் தேதி, காலை, 6:00 மணிக்கு நான்காம் கால பூஜையும், காலை, 9:00 மணி முதல், 10:00 மணி வரை கோவில் கோபுர விமானங்கள், மூலவர் ஆறுமுக சுவாமி மீது, புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடக்கிறது. தொடர்ந்து, மதியம், 12:00 மணிக்கு, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடக்கிறது.