ஊட்டி நாராயண குருகுலத்தில் குருபூஜை விழா
ADDED :3144 days ago
ஊட்டி : ஊட்டி நாராயண குருகுலத்தில் குருபூஜை விழா நடக்கிறது. ஊட்டி பர்ன்ஹில் மஞ்சனக்கொரை பகுதியில், நடராஜ குருவால் நிறுவப்பட்ட நாராயண குருகுலத்தின், 94வது ஆண்டு நிறைவு விழா, 16ல் நடக்கிறது. மேலும், வருடாந்திர பூஜை, நடராஜ குருவின், 44வது ஆண்டு மகா சமாதி நாள், குரு நித்ய சைதன்ய யதியின், 18வது ஆண்டு மகா சமாதி நாள் ஆகியவை மறு சமர்ப்பண நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. முன்னதாக, தென்கிழக்கு நாடுகளுக்கு இடையேயான பிரம்மோற்சவ கருத்தரங்கு, 13ம் தேதியில் இருந்து, 15ம் தேதி வரை நடத்தப்படுகிறது. 16ம் தேதி காலை, ஆன்மிக பேருரை, புத்தக வெளியீடு , மதியம், 2:30 மணிக்கு இந்துஸ்தானி இசை, கலை நிகழ்ச்சிகள், மாலை, 4:30 மணிக்கு நடன நிகழ்ச்சி, மாலை, 6:00 மணிக்கு பிரார்த்தனை, 7:00 மணிக்கு தோடர்களின் குறும்படம் ஆகியவை இடம் பெறுகிறது.