முத்து மாரியம்மன் கோவில் விழா
ADDED :3144 days ago
குன்னூர் :குன்னூர் - மேட்டுப்பாளையம் சாலையில் காந்திபுரம் அருகே, இந்திராநகர் பகுதியில் உள்ள முத்துமாரியம்மன் கோவிலில், 23வது ஆண்டு திருவிழா நாளை துவங்குகிறது. காலை 9:30 மணிக்கு கொடியேற்றம், 10:00 மணிக்கு கரகம் பாலித்தல் நடக்கிறது. 8ம் தேதி காலை, 8:00 மணிக்கு அம்மன் அலங்காரம், மதியம் 1:00 மணிக்கு பூ குண்டம் இறங்குதல், மாலை, 4:00 மணிக்கு தேர் ஊர்வலம், பறவைக்காவடி ஊர்வலம் நடக்கிறது. 9ம் தேதி காலை, 11:00 மணிக்கு அம்மன் திருக்கல்யாண உற்சவம், மதியம், 1:00 மணிக்கு அன்னதானம், மாவிளக்கு பூஜை, கரகம் குடிவிடும் நிகழ்ச்சி நடக்கிறது.