மேலும் செய்திகள்
இறைச்சகாளி கோவிலில் ரூ. 40 ஆயிரம் பொருட்கள் திருட்டு
5058 days ago
பொய்குணம் முத்துமாரியம்மன் கோவில் தேர் திருவிழா
5058 days ago
ஈரோடு: ஈரோட்டில் அம்மன் கண் திறந்ததாக வெளியான தகவலால், கூட்டம் அலைமோதியது.ஈரோடு கோட்டை சின்னப்பாவடி, ஓம் சக்தி பத்ரகாளியம்மன் கோவில் பூசாரியாக மணிகண்டன் பணிபுரிகிறார். நேற்று மதியம் பூஜைக்கு பின், பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கினார்.அப்போது, மூலவர் சிலைக்கு முன் இருக்கும், சுயம்பின் கண்கள் திறந்திருந்ததாக பூசாரி கூறினார். இத்தகவல் வேகமாக பரவியது. அப்பகுதி பொதுமக்கள் கோவிலில் கூடினர். அம்மனை பார்க்க, அனைவரும் போட்டியிட்டதால், கோவிலில் கடும் நெரிசல் ஏற்பட்டது.ஒருவரை ஒருவர், "ஸ்வாமி கண் திறந்ததை பார்த்தீர்களா? என, கேட்டுக்கொண்டனர். ஆனால், அம்மன் சிலை, சிலையாகத்தான் இருந்தது. மூலவர் அருகில் செல்ல யாரையும் விடவில்லை. கோவிலின் விளக்குகள் அனைத்தையும் அணைத்திருந்தனர்.பூசாரி மணிகண்டனிடம் கேட்டபோது, "ஸ்வாமியை நம்புபவர்களுக்கு திறந்தது தெரியும். இல்லை என்பவருக்கு இல்லை, என்றார். அத்துடன், ""இரண்டு மாதங்களுக்கு முன், கோவில் திருவிழாவின் போது, அம்மன் கண் திறந்திருந்தது. நாங்கள் தான் வெளியில் யாரிடமும் சொல்லவில்லை, என்று கூறினார். படம் எடுக்கவும் அனுமதிக்கவில்லை.கோவிலில் விரைவில் கும்பாபிஷேகம் நடக்கிறது.
5058 days ago
5058 days ago