வெயிலுகந்தம்மன் கோயிலில் கும்பாபிஷேக விழா துவக்கம்!
விருதுநகர்: விருதுநகர் பராசக்தி வெயிலுகந்தம்மன் கோயில் கும்பாபிஷேக விழா துவங்கியது. நவ. 7 ல் கும்பாபிஷேகம் நடக்கிறது. வெயிலுகந்தம்மன் கோயில் கும்பாபிஷேக விழா நவ. 2 ல் விக்னேஸ்வர பூஜை, மஹா கணபதி ஹோமம், வாஸ்து சாந்தியுடன் துவங்கியது. நவ. 3 ல் நவக்கிரக ஹோமம், தீபாராதனை நடந்தது. இன்று துர்க்கா ஹோமம், கடஸ்தாபனம், முதற்கால பூஜைகள் நடக்கிறது. நாளை இரண்டாம், மூன்றாம் கால பூஜைகள் பூர்ணாஹூதி, தீபாராதனை நடக்கிறது. நவ. 6 ல் நான்காம், ஐந்தாம் கால பூஜைகள் நடக்கவுள்ளன. நவ. 7 ல் ஆறாம் கால பூஜை, காலை 6.45 மணிக்குகோபுர கும்பாபிஷேகம் ,காலை 7.05 மணிக்கு மூலஸ்தான கும்பாபிஷேகம், காலை 9.30 மணிக்கு மகாஅபிஷேகம் நடக்கிறது. இரவு 8 மணிக்கு அம்மன் வெள்ளி ரிஷப வாகனத்தில் நகர் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். கும்பாபிஷேகத்தை பிள்ளையார்பட்டி கே. பிச்சை குருக்கள் நடத்துகிறார். ஏற்பாடுகளை இந்து நாடார் தேவஸ்தானத்தினர், நிர்வாகிகள்செய்து வருகின்றனர்.