உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பாலசுப்ரமணியர் கோவிலில் நாளை தேர்த்திருவிழா

பாலசுப்ரமணியர் கோவிலில் நாளை தேர்த்திருவிழா

மல்லசமுத்திரம்: வையப்பமலை, பாலசுப்ரமணியர் சுவாமி கோவிலில் நாளை தேர்த்திருவிழா நடக்க உள்ளது. எலச்சிபாளையம் அடுத்த, வையப்பமலையில் நடக்க உள்ள தேர்த்திருவிழாவை முன்னிட்டு, இன்று இரவு, 9:00 மணிமுதல், 12:00 மணிவரை சுவாமிக்கு திருக்கல்யாணம் நடக்கிறது. தொடர்ந்து, பங்குனி உத்திரமான நாளை ங்ஏப்.,9சி காலை, 10:00 மணிக்கு, சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்று, வெள்ளிக் கவசத்தில் அருள்பாலிக்க உள்ளார். மாலை, 4:00 மணிக்கு, அலங்கரிக்கபட்ட தேரினை பொதுமக்கள் வடம்பிடித்து, மலையை சுற்றி இழுக்க உள்ளனர். ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் ஊர்பொதுமக்கள் செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !