சோழவந்தான் சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு
ADDED :3127 days ago
சோழவந்தான்:சனி பிரதோஷத்தை முன்னிட்டு சோழவந்தான் பகுதியில் உள்ள சிவன் கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தது.சோழவந்தான் பிரளயநாதசாமி கோவிலில், நேற்று முன்
தினம் மாலை, 5:30 மணிக்கு நந்தி மற்றும் சிவனுக்கு சிறப்பு பூஜை நடந்தது. தொடர்ந்து, ரிஷப வாகனத்தில் பிரளயநாதர்சுவாமியும், பிரளயநாயகி அம்பாளும் பிரகாரத்தை வலம் வந்து, பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.இதேபோல், திருவேடகம் ஏடகநாதர் சுவாமி கோவில், தென்கரை மூலநாதசுவாமி கோவில், பேட்டை அருணாச்சலேஸ்வரர் கோவில், மன்னாடிமங்கலம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில், உள்ளிட்ட சிவன் கோவில்களில் சனி பிரதோஷத்தை முன்னிட்டு பல்வேறு சிறப்பு அபிஷேகங்கள் நடந்தன.