உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ரங்கநாத பெருமாள் கோவிலில் வளர்பிறை ஏகாதசி விழா

ரங்கநாத பெருமாள் கோவிலில் வளர்பிறை ஏகாதசி விழா

பொள்ளாச்சி: ஆனைமலை ஸ்ரீதேவி, பூதேவி சமேத ரங்கநாத பெருமாள் கோவிலில், வளர்பிறை ஏகாதசிவிழா நடந்தது. விழாவையொட்டி, ஒன்பது வகை அபிேஷகம், ஒன்பது வகை மலர்கள் உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடந்தன.  சிறப்பு அலங்காரத்தில்,  ஸ்ரீதேவி, பூதேவி சமேத ரங்கநாத பெருமாள் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவில் பங்கேற்ற பக்தர்களுக்கு மஞ்சள், குங்குமம், வளையல், மஞ்சள் சரடு, கற்கண்டு உள்ளிட்ட பூஜை பொருட்கள் வழங்கப்பட்டன. விழாவுக்கான  ஏற்பாடு களை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !