மகமாயி அம்மன் கும்பாபிஷேகம்
ADDED :3126 days ago
பாலமேடு:பாலமேடு மறவபட்டியில் உள்ள மகமாயி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் விமரிசையாக நடந்தது. மூன்றாம் கால பூஜை முடிந்து கோயில் திருப்பணிக்குழு தலைவர் பாண்டியன், ஒருங்கிணைப்பாளர் மாரிச்செல்வம், கருப்பையா பூஜாரி, சச்சிதானந்த சுவாமிகள், சாரதாநந்த சுவாமிகள், பாலமுருகன் சுவாமிகள் அடங்கிய குழுவினர் புனித நீர் கலசம் தூக்கி கோபுரம் சென்றனர்.சிவாச்சார்யர்கள் கோபுர கலசத்தில் புனித நீர் ஊற்றினர். தொடர்ந்து விநாயகர், முருகன், தட்சிணாமூர்த்தி, கருப்பு சுவாமி உட்பட பரிவார தெய்வங்களுக்கும் புனித நீர் ஊற்றினர். அன்னதானம், பிரசாதம் வழங்கினர். மதுரை ஐகோர்ட் கிளை
அனுமதியுடன் ஆடல், பாடல் நிகழ்ச்சி நடந்தது.