உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / குமாரபாளையம் பங்குனி உத்திர திருவிழா

குமாரபாளையம் பங்குனி உத்திர திருவிழா

பங்குனி உத்திர திருவிழா கோலாகலம்: பக்தர்கள் பெருமளவில்  பங்கேற்பு
 குமாரபாளையத்தில், பங்குனி உத்திர  விழாவையொட்டி, அனைத்து முருகன் கோவில்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடந்தன. குமாரபாளையத்தில், பங்குனி உத்திர விழாவையொட்டி வட்டமலை முருகன் கோவில், பாலமுருகன் கோவில், மருதமலை முருகன் கோவில், தேவாங்கர் மாரியம்மன் கோவில், உடையார்பேட்டை ராஜகணபதி கோவில் வளாகத்தில் உள்ள முருகன் கோவில்கள் உள்ளிட்ட பல்வேறு முருகன்
கோவில்களில் திருவிழா களை கட்டியது. காவிரி ஆற்றிலிருந்து மூன்று கி.மீ. தொலைவில் உள்ள, வட்டமலை வரை தீர்த்தக்குட ஊர்வலம் நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் காவடி
எடுத்துக்கொண்டு ஆடியவாறும், 500க்கும் மேற்பட்ட பெண்கள் பால்குடங்களை தலையில் சுமந்தவாறும் முருகனுக்கு அரோகரா, கந்தனுக்கு அரோகரா என்ற சரண கோஷத்துடனும் சென்றனர். மலர்களாலும், வண்ண வண்ண விளக்கு களாலும் அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் விநாயகர், முருகன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தபடி தீர்த்தக்குட
ஊர்வலத்தில்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !