14ல் தீர்த்தக்குட ஊர்வலம்: பக்தர்கள் பங்கேற்கலாம்
ADDED :3107 days ago
ஈரோடு: ஈரோடு வீரப்பன் சத்திரம் மாரியம்மன் கோவிலில், தமிழ் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு, வரும், 14ல் காவிரி ஆற்றில் இருந்து தீர்த்தம் எடுத்து வந்து, மாரியம்மன், மற்றும் கஜமுக கணபதிக்கு அபிஷேகம் செய்யும் விழா நடக்கிறது. தீர்த்த ஊர்வலத்தில் பக்தர்கள் திரளாக பங்கேற்று, அம்மன் அருள் பெற, விழாக் குழுவினர் கேட்டுக் கொண்டுள்ளனர். காவிரி தீர்த்த அபிஷேகம் அதைத் தொடர்ந்து, அலங்காரம், தீபாராதனை, மதியம் அன்னதானம் நடக்கிறது.