விருதுநகர் பராசக்தி மாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழா
விருதுநகர்: பராசக்தி மாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழா கடந்த 2ல் கொடியேற்றத்துடன் துவங்கியது.ஏற்கனவே காப்புக்கட்டு கடந்த மார்ச் 19ல் துவங்கிய நிலையில் அன்று முதல் விரதம் இருந்து தினமும் காலை மற்றும் மாலையில் பெண் பக்தர்கள் குடங்களில் நீர் சேகரித்து கொடி மரத்திற்கு ஊற்றி வழிப்பட்டு வந்தனர்.
இதற்காக ஏப். 7, 8,9 ல் கூட்டம் அலை மோதியது. தினமும் பராசக்தி மாரியம்மன் மற்றும் வெயிலுகந்தம்மன் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி அருள் பாலித்தனர். ஏப்.9 ல் பொங்கல் வழிபாடு நடந்தது. அன்று இரவு முதல் 10ம் தேதி இரவு வரை பக்தர்கள் பறக்கும் காவடி,அக்னிசட்டி,உடலில் கரும்புள்ளி செம்புள்ளி குத்தி ,அலகு குத்தி ,குழந்தைகளை கரும்பு தொட்டிலில் வைத்து என பல்வேறு நேர்த்திகடன் செலுத்தினர். கடந்த மூன்று நாட்களில் மட்டும் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு வழிப்பட்டனர்.இன்று மாலை பராசக்தி மாரியம்மன் மற்றும் வெயிலுகந்தம்மன் தேரில் எழுந்தருள தேரோட்டம் நடக்கிறது.