மழை வேண்டி நூதன வழிபாடு
ADDED :3105 days ago
பவானி: பவானி அருகே, மழை வேண்டி, கிராம மக்கள் நூதன வழிபாட்டில் ஈடுபட்டனர். பவானி - ஆப்பக்கூடல் வழியில், ஒரிச்சேரி கிராமம் உள்ளது. இப்பகுதியை சேர்ந்த ஏராளமான
பெண்கள், ஆண்கள், நேற்று காலை, 9:00 மணியளவில், பழைய முறம், பாய், விளக்குமாறு ஆகியவற்றை ஒரு இடத்தில் போட்டனர். பின் மழை வேண்டி ஒப்பாரி வைத்தனர். வீதி வீதியாக
சென்று, மழைக் கஞ்சி பெற்றனர். பின்னர் மாரியம்மன் கோவிலில் மண் கலயத்தில் கலக்கி, அம்மனை வழிபட்டு அருந்தினர். இவ்வாறு வழிபட்டால், மழை வரும் என்பது ஐதீகம். அதனால்தான் வழிபாட்டில் ஈடுபட்டதாக, தெரிவித்தனர்.