உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நட்டாற்றீஸ்வரர் கோவிலில் இன்று தமிழ் புத்தாண்டு வழிபாடு துவக்கம்

நட்டாற்றீஸ்வரர் கோவிலில் இன்று தமிழ் புத்தாண்டு வழிபாடு துவக்கம்

மொடக்குறிச்சி: நட்டாற்றீஸ்வரர் கோவிலில் தமிழ் புத்தாண்டு  பிறப்பு சிறப்பு வழிபாடு நிகழ்ச்சி இன்று துவங்குகிறது.மொடக்குறிச்சி தாலுகா, காங்கேயம்பாளையத்தில் உள்ள
நட்டாற்றீஸ்வரர் கோவிலில் ஆண்டுதோறும், சித்திரை முதல் தேதி, விழா கொண்டாடப்படுகிறது. இந்தாண்டு விழா இன்று (11ல்) காலை, 10:30 மணிக்கு தொடங்குகிறது. முருகனுக்கு சக்தியாயுதார்ச்சனை சகித லட்சார்ச்சனை நடக்கிறது. மாலையில் மீண்டும் லட்சார்ச்சனை துவங்கி நடைபெறுகிறது. நாளையும் (12ல்) காலை, மாலை லட்சார்ச்சனை நடக்கிறது. 13ல் மாலை, 3:00 மணிக்கு, 108 சங்காபிஷேகம், ருத்ர பாராயணம், சாந்தாபிஷேகம் நடக்கிறது. தமிழ் புத்தாண்டு நாளான, 14ல், அதிகாலை, 3:30 மணிக்கு, 108 சங்குஸ்நபனம், ருத்ர பாராயண  ஹோமம் நடக்கிறது. காலை, 6:00 மணிக்கு மேல், 108 சங்காபிஷேகம் நடக்கிறது. சித்திரை மாத பிறப்பு தினத்தில், இக்கோவிலில் தரிசனம் செய்தால் பிரம்மஹத்தி தோஷம் நீங்கும் என்பது ஐதீகம். பிரம்மஹத்தி தோஷம் நீங்க, மணலால் சிவலிங்கம் பிடித்து, அகத்தியர் தியானம் செய்த இடமாக, இக்கோவில் கருதப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !