உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பரமக்குடி முத்தாலம்மன் கோயிலில் கொடியிறக்கம்

பரமக்குடி முத்தாலம்மன் கோயிலில் கொடியிறக்கம்

பரமக்குடி: பரமக்குடி முத்தாலபரமேஸ்வரி அம்மன் கோயிலில் பங்குனித் திருவிழா  கொடியிறக்கத்துடன் நிறைவடைந்தது.

கொடியேற்றம் ஏப்.,2 ல் நடந்தது. தினமும் அம்மன் பல்வேறு வாகனங்களில் அருள்பாலித்தார். முக்கிய நிகழ்வாக நேற்று முன்தினம் இரவு மின்சார ரதத்தில் அம்மன் எழுந்தருளினார். நேற்று அதிகாலை 4 மணிக்கு மேல் அம்மன் ஈட்டி, வளரி ஏந்தி கள்ளர் திருக்கோலத்துடன் பூப்பல்லக்கில் வைகை ஆற்றில் அருள்பாலித்தார். தொடர்ந்து நேற்று காலை தீர்த்தவாரி நடந்தது. இரவு கொடியிறக்கப்பட்டது. இன்று காலை ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்கும் பால்குடம் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !