உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பழநி பங்குனி உத்திர திருவிழாவில் பறவைக்காவடி பக்தர்கள்

பழநி பங்குனி உத்திர திருவிழாவில் பறவைக்காவடி பக்தர்கள்

பழநி: பழநி பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு, பக்தர்கள் தீர்த்தக் காவடிகள், பறவைக்காவடிகள் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். பழநி பங்குனி உத்திர திருவிழா ஏப்.,3ல் துவங்கி இன்று பத்தாம்நாள் தங்ககுதிரையில் சுவாமி புறப்பாடு, இரவு கொடிஇறக்குதலுடன் நிறைவுபெறுகிறது. ஈரோடு, திருப்பூர், கோவை, திண்டுக்கல், பழநி, உடுமலை,சேலம், பொள்ளாச்சி பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் ஈரோடு மாவட்டம் கொடுமுடியில் இருந்து தீர்த்தக்காவடிகள் எடுத்து பழநிக்கு பாதயாத்திரையாக வந்த வண்ணம் உள்ளனர். நேற்று சேலம் மாவட்டத்தின் நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் தீர்த்தக்காவடிகள் எடுத்து வந்தனர். மயில்காவடி, உடலில் அலகு குத்தி, கிரேன் வண்டியில் பறவையாக பறந்தபடியும் காவடி எடுத்து, கிரிவீதியை வலம் வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். மலைக்கோயிலில் மூலவருக்கு தீர்த்த அபிஷேகம் செய்து ஏராளமான பக்தர்கள் வழிபடுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !