பெத்தநாயக்கன்பாளையம் கூத்தாண்டவர் கோவிலில் வரும் 14ல் சித்திரை விழா
ADDED :3098 days ago
பெத்தநாயக்கன்பாளையம் ஏத்தாப்பூர் அருகே, பனமடல் கூத்தாண்டவர் கோவிலில் வரும், 14ல், சித்திரை தேர்த்திருவிழா நடக்கிறது. முன்னதாக, இன்று இரவு பெரியம்மாள் குடியழைப்பும், நாளை காலை சின்னம்மாள் குடியழைப்பும், இரவு கூத்தாண்டவர் குடியழைப்பும் நடக்கிறது. வரும், 14 அதிகாலை, 4:30 மணிக்கு கூத்தாண்டவர் கண் திறப்பும், காலை, 9:00 மணியளவில் கூத்தாண்டவர் திருத்தேர் வடம் பிடித்தல் மற்றும் கூத்தாண்டவர், சின்னம்மாள், பெரியம்மாள் சுவாமிகள் திருவீதி உலா, மாலை, 3:00 மணியளவில் அலகு குத்துதல் நடக்கிறது. வரும், 15ல், திருத்தேர் இழுத்தல் நடக்கிறது. இரவு, 8:00 மணிக்கு சுவாமி திருவீதி உலா நடக்கிறது.