உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிம்மம்: துணிச்சலுடன் செயலாற்றும் சிம்ம ராசி அன்பர்களே!

சிம்மம்: துணிச்சலுடன் செயலாற்றும் சிம்ம ராசி அன்பர்களே!

மேளம் கொட்ட நேரம் வந்தாச்சு!ராசிக்கு 2ல் உள்ள குரு, 8ல் உள்ள சுக்கிரனால் நன்மை அதிகரிக்கும். புதன் ஏப்.26 வரை  சாதகமாக இருப்பதால் வாழ்வில் வளர்ச்சி உண்டாகும். மற்ற கிரகங்களால் சுமாரான பலன் கிடைக்கும். குருவின்  பார்வை பலத்தால்  புதிய முயற்சியில் ஆர்வமுடன் ஈடுபடுவீர்கள். வருமானம் படிப்படியாக அதிகரிக்கும்.  மாத முற்பகுதியில் பொன், பொருள் சேர வாய்ப்புண்டு. பிள்ளைகளின் செயல்பாடு பெருமையளிக்கும். கல்வி, வேலைவாய்ப்பில் முன்னேற்றம் காண்பர். திருமண விஷயத்தில் மேளம் கொட்ட நல்ல நேரம் வந்து விட்டது. குடும்பத்தில் நிம்மதி நிலைக்கும். பெண்கள் ஆதரவுடன் செயல்படுவர். குடும்பத்துடன் சுற்றுலா செல்ல வாய்ப்புண்டு. பெற்றோரின் நலனில் அக்கறை கொள்வீர்கள். சகோதர வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். மே 4,5,6ல் விருந்து, விழா என சென்று மகிழ்வீர்கள்.  ஏப். 30, மே 1ல் உறவினர் வருகையால் நன்மை உண்டாகும். ஏப்.14,15,16,  மே 11,12,13ல் அவர்கள் வகையில் கருத்துவேறுபாடு ஏற்பட வாய்ப்புண்டு. மாத பிற்பகுதியில் கணவன், மனைவி இடையே வாக்குவாதம் ஏற்படலாம்.  ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. உடல்நலம் சுமாராக இருக்கும். செவ்வாயால் உஷ்ணம், தோல் தொடர்பான பிரச்னை ஏற்படலாம். பயணத்தின்  போது கவனம் தேவை. தொழில், வியாபாரத்தில் படிப்படியான வளர்ச்சி உண்டாகும். புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு ஆதாயம் காண்பீர்கள். பெண்களை பங்குதாரராக கொண்ட நிறுவனம் நல்ல முன்னேற்றம் பெறும். வங்கி நிதியுதவியுடன் புதிய தொழில் முயற்சியில் ஈடுபடுவர். தொழிலாளர் ஒத்துழைப்பு சிறப்பாக இருக்கும். அரசாங்க வகையில் எதிர்பார்த்த நன்மை கிடைக்கும். ஏப்.26க்கு பிறகு முயற்சியில்  தடை குறுக்கிடலாம். ஏப்.19,20ல் எதிர்பாராத வகையில் வருமானம் வரும்.  மே ௨,3,7,8 ஆகிய நாட்களில் பணப் பொறுப்பை மற்றவர்களிடம் ஒப்படைக்க வேண்டாம்.                                                     பணியாளர்கள் சக  ஊழியர்களின் ஆதரவு கிடைக்கப் பெறுவர்.  அதிகாரிகளின் குறிப்பறிந்து நடப்பது அவசியம். பணி ரீதியான வெளியூர் அடிக்கடி செல்ல நேரிடும். எதிர்பார்த்த  கோரிக்கையை ஏப்.26க்குள் கேட்டு பெறுவது நல்லது. அதன் பிறகு பணிச்சுமை அதிகரிக்கும். வழக்கமான சலுகை கிடைப்பதில் தடை இருக்காது. ஏப். 28,29  சிறப்பான நாட்களாக அமையும். கலைஞர்களுக்கு மறைமுகப் போட்டி  குறையும். புதிய ஒப்பந்தம் எளிதில் கையெழுத்தாகும். தொழில் ரீதியான பயணம் அடிக்கடி செல்ல நேரிடும். அரசியல்வாதிகள் சுமாரான பலன் கிடைக்கப் பெறுவர். எதிர்பார்த்த பதவி கிடைப்பதில் தாமதம் உண்டாகும். மாணவர்கள் சிறப்பான வளர்ச்சி காண்பர். போட்டி, பந்தயத்தில் பங்கேற்று வெற்றி காண்பர்.  ஏப்.26க்கு பிறகு  பெற்றோரின் வழிகாட்டுதலை ஏற்பது நன்மையளிக்கும். விவசாயிகளுக்கு கரும்பு, எள், காய்கறி,  பழ வகைகள்  மூலம் நல்ல வருமானம் கிடைக்கும். புதிய சொத்து வாங்க பொறுமை காப்பது நல்லது.  வழக்கு, விவகாரத்தில் முடிவு சுமாராக இருக்கும். புதிய வழக்குகளில் சிக்க வேண்டாம்.             பெண்கள் சிறப்பான நிலையில் இருப்பர். பிள்ளைகளால் மகிழ்ச்சியும், பெருமையும் கிடைக்கும். ராகுவால் வெளியூரில் தங்கும் சூழ்நிலை உருவாகலாம். ஏப்.26க்கு பிறகு குடும்பத்தாரிடம்  விட்டுக் கொடுத்து போவது நல்லது.  வேலைக்கு செல்லும் பெண்கள் அதிகமாக உழைக்க வேண்டியது இருக்கும். முக்கிய பொறுப்பை பிறரிடம் ஒப்படைக்க வேண்டாம்.  மே 9,10ல் ஆடை, அணிகலன் வாங்க யோகமுண்டு. பெற்றோர் வீட்டில் இருந்து சீதனம் வரப் பெறலாம். ஏப்.21,22,23ல்  விருந்து, விழா என சென்று வருவீர்கள். சகோதர வழியில்  பணஉதவி கிடைக்கும்.                                                       நல்ல நாள் : ஏப்.19,20,21,22,23,28,29,30, மே 1,4,5,6,9,10                                                       கவன நாள் : ஏப்.24,25 சந்திராஷ்டமம்.   இந்த நாட்களில் புதிய முயற்சியில் ஈடுபடுவதை தவிர்க்கவும். பயணத்தின் போது விழிப்புடன் இருப்பது நல்லது.                                                      அதிர்ஷ்ட  எண் : 2,4    நிறம் : வெள்ளை, பச்சை  பரிகாரம்: சனியன்று ஆஞ்சநேயர் வழிபாடு. தினமும் காலையில் சூரிய தரிசனம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !