உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சந்தான வேணுகோபால சுவாமி பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் துவங்கியது

சந்தான வேணுகோபால சுவாமி பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் துவங்கியது

ஆர்.கே.பேட்டை : சந்தான வேணுகோபால சுவாமி கோவில்,  ஆண்டு பிரம்மோற்சவம், நேற்று காலை, கொடியேற்ற த்துடன்  துவங்கியது. அம்சவாக னத்தில் எழுந்தருளிய உற்சவர்
பெருமாளை திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். ஆர். கே.  பேட்டை அடுத்த, எஸ்.வி.ஜி.புரம் எனப்படும் வேப்பகுண்டா  பாளையம் கிராமத்தில் அமைந்துள்ளது பழமையான சந்தான  வேணுகோபாலசுவாமி கோவில்.வேணுகானம் இசைத்தபடி நின்ற
கோலத்தில் அருள்பாலிக்கிறார் மூலவர் சந்தான வேணுகோபால  சுவாமி.  இந்த கோவிலின் ஆண்டு  பிரம்மோற்சவம், நேற்று  காலை, கொடியேற்றத்துடன் துவங்கியது. எஸ். பி.
கண்டிகை,எஸ்.வி.ஜி.புரம் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த  திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். காலை, 9:00 மணிக்கு, கோவில் அர்த்த மண்டபத்தில் நடந்த சிறப்பு வழிபாட்டை
தொடர்ந்து, கொடியேற்றம் நடந்தது. மாலை, 6:00 மணிக்கு  உற்சவர் அம்ச வாகனத்தில் வீதியுலா எழுந்தருளினார். இன்று,  வியாழக்கிழமை மாலை, சிம்ம வாகனத்தில் உற்சவர் வீதியுலா  வருகிறார். தினமும் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளும்  உற்சவர், வரும் ஞாயிற்றுக்கிழமை முக்கிய உற்சவமான  கருடவாகனத்தில் சேவை சாதிக்கிறார். 20ம் தேதி சக்கர ஸ்தானத்துடன்  உற்சவம் நிறைவு பெறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !