/
கோயில்கள் செய்திகள் / திருச்செந்தூர் கோயிலுக்கு சரவணாஸ்டோர்ஸ் சார்பில் 3 கிலோ தங்க ஆபணங்கள் காணிக்கை
திருச்செந்தூர் கோயிலுக்கு சரவணாஸ்டோர்ஸ் சார்பில் 3 கிலோ தங்க ஆபணங்கள் காணிக்கை
ADDED :3098 days ago
திருச்செந்தூர் : திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு, சென்னை சரவணா ஸ்டோர்ஸ் குடும்பத்தினர் 86 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்கவேல்கள், சேவற்கொடியினை வழங்கினர். திருச்செந்தூர், முருகன் கோயிலில் நேற்று நடந்த நிகழ்ச்சியில், சென்னை தியாகராயநகர், தி லெஜன்ட் சரவணா ஸ்டோர்ஸ் அதிபர் எஸ்.எஸ்.சரவணா என்ற பொன்துரை மற்றும் அவரது தாயார் லட்சுமியோகரத்தினம், மனைவி பால செல்வி ஆகியோர் கோயிலுக்கு தங்க ஆபரணங்களை காணிக்கையாக வழங்கினர். இரண்டு தங்கவேல்கள், ஒரு கொழுசாயுதம், ஒரு சேவற்கொடி ஆகியவற்றை வழங்கினர். 3 கிலோ எடையுடன் 86.45 லட்சம் ரூபாய் மதிப்பிலானவை. அவற்றை பெற்றுக்கொண்ட கோயில் தக்கார் கோட்டை மணிகண்டன், இணை ஆணையர் வரதராஜன் ஆகியோர், தங்கவேல்களை ஜெயந்திநாதர் மற்றும் சண்முகருக்கும், கொழுசாயுதத்தை மூலவருக்கும் சேவற்கொடியினை சண்முகருக்கு அணிவித்து அலங்கரித்தனர்.