உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பூஜையில் உபயோகப்படுத்தும் நைவேத்ய பொருள்களும் அவற்றின் சமஸ்க்ருத பெயர்களும்!

பூஜையில் உபயோகப்படுத்தும் நைவேத்ய பொருள்களும் அவற்றின் சமஸ்க்ருத பெயர்களும்!

அன்றாடம் வீட்டில் பூஜை செய்யும் போது பலவித நைவேத்ய பொருளை பயன்படுத்துவோம். அவ்வாறு நாம் பயன்படுத்தும் நைவேத்ய பொரு ள்களும் அவற்றின் சமஸ்க்ருத பெயர்களும் கொடுக்கப்பட்டுள்ளது.

அவையாவன:

1) வெற்றிலைப் பாக்கு - தாம்பூலம்
2) முழுத்தேங்காய் - நாரிகேலம்
3) பல தேங்காய் மூடிகள் - நாரிகேல கண்டாணீ
4) வாழைப்பழம் - கதலி பலம்
5) மாம்பழம் - ஆம்ர பலம்
6) விளாம்பழம் - கபித்த பலம்
7)நாகப்பழம் ( நாவல்பழம்  ) - ஜம்பு பலம்
8) பலாப்பழம் - பனஸ பலம்
9) சாத்துக்குடி - நாரங்க பலம்
10) ஆப்பிள் பழம் - காஷ்மீர பலம்
11) பேரிக்காய் - பேரீ பலம்
12) கொய்யாப் பழம் - பீஜா பலம்
13) திராட்சை பழம் - திராட்ஷா பலம்
14) பேரீச்சம் பழம் - கர்ஜீர பலம்
15) பிரப்பம் பழம் - வேத்ர பலம்
16) கரும்பு - இக்ஷூ தண்டம்
17) மாதுளம்பழம் - தாடிமீ பலம்
18) எலுமிச்சம்பழம் - ஜம்பீர பலம்
19) வடை - மாஷாபூபம்
20) மஞ்சள் பொங்கல் - ஹரித்ரான்னம்
21) எள்ளுச்சாதம் - திலோன்னம்
22) சர்க்கரைப் பொங்கல் - குடான்னம்
23) அக்காரவடிசல் - சர்க்கரான்னம்
24) வெண்பொங்கல் - முத்கான்னம்
25) புளியோதரை - திந்திரிணியன்னம்
26) வெள்ளைசாதம் - சுத்தான்னம்
27) எலுமிச்சைசாதம் - ஜம்பீரபலன்னம்
28) தேங்காய் சாதம் - நாரிகேலன்னம்
29) தயிர்சாதம் - தத்யோன்னம்
30) பலவித சாதங்கள் - சித்ரான்னம்
31) சுண்டல் - க்ஷணகம்
32) பால் பாயாசம் - க்ஷீர பாயஸம்
33) வெல்ல பாயாசம் - குட பாயஸம்
34) புட்டு - குடமிச்சபிஷ்டம்
35) முறுக்கு - சஷ்குலி
36) இட்லி - லட்டுகானி
37) கொழுக்கட்டை - மோதகானி
38) அப்பம் - குடாபூபம்
39) மாவிளக்கு - குடமிஸ்ஸபிஷ்டம்
40) அதிரசம் - குடாபூபம்
41) உளுந்து - மாஷம்
42) பயறு - முத்கம்
43) எள் - திலம்
44) கடலை - க்ஷணகம்
45) கோதுமை - கோதுமா
46) அரிசி - தண்டுலம்
47) அவல் - ப்ருதுகம்
48) நெய் - ஆஜ்யம்
49) பருப்பு பாயாசம் - குடபாயஸம்
50) பால் - க்ஷீரம்
51) சுக்கு வெல்லம் கலந்த நீர் - பானகம்
52) வெண்ணெய் - நவநீதம்
53) கல்கண்டு - ரஸ கண்டாளீ
54) மல்லிகைப்பூ - மல்லிகாபுஷ்பம்
55) செவ்வந்திப்பூ - ஜவந்திபுஷ்பம்
56) தாமரைப்பூ - பத்மபுஷ்பம்
57) அருகம்புல் - தூர்வாயுக்மம்
58) வன்னிஇலை - வன்னிபத்ரம்
59) வில்வ இலை - பில்வபத்ரம்
60) துளசி இலை - துளஸிபத்ரம்
61) ஊதுபத்தி / சாம்பிராணி - தூபம்
62) விளக்கு - தீபம்
63) சூடம் - கற்பூரம்
64) மனைப்பலகை - ஆசனம்
65) ரவிக்கைத்துணி - வஸ்த்ரம்
66) மஞ்சள்/குங்குமம் கலந்த அரிசி - மங்களாட்சதை
67) ஜலம் நிரப்பிய சொம்பு - கலசம்
68) திருமாங்கல்ய சரடு - மங்கலசூத்ரம்
69) மற்ற பட்சணங்கள் - விசேஷபக்ஷணம்
70) பூநூல் - யக்ஞோபவீதம்
71) சந்தணம் - களபம்
72) விபூதி - பஸ்பம்
73) வாசனை திரவியங்கள் - ஸுகந்தத்ரவ்யா.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !