உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வேளாங்கண்ணி தேவாலயத்தில் புனித வெள்ளி சிறப்பு வழிபாடு

வேளாங்கண்ணி தேவாலயத்தில் புனித வெள்ளி சிறப்பு வழிபாடு

நாகப்பட்டினம், வேளாங்கண்ணி தேவாலயத்தில், நேற்று மாலை நடந்த புனித வெள்ளி இறை வழிபாடு நிகழ்ச்சியில் பல்லாயிரக்கணக்கானோர்பங்கேற்றனர். இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட புனித வெள்ளி தினமான நேற்று, நாகை அடுத்த வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா தேவாலயத்தில் சிறப்பு திவ்ய நற்கருணை ஆராதனை நிகழ்ச்சிகள் நடந்தன. திவ்ய நற்கருணை ஆராதனையை தொடர்ந்து, தேவாலய கலையரங்கில், மாலை, 6:30 மணிக்கு, பேராலய அதிபர் பிரபாகர் உள்ளிட்ட, 10க்கும் மேற்பட்ட பாதிரியார்கள் தலைமையில் இறை வழிபாடு, பொது மன்றாட்டு, சிலுவை ஆராதனைநடந்தது. சிறப்பு திருப்பலியில், நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !