அங்காளம்மன் கோவில் முப்பெரும் விழா
அவிநாசி;அவிநாசி அருகே சாமந்தன் கோட்டையில், அங்காள பரமேஸ்வரி, காசிவிஸ்வநாதர் சமேத விசாலாட்சி அம்மன், ஸ்ரீதேவி பூதேவி சமேத சீனிவாச பெருமாள் கோவில் உள்ளது. இங்கு, முப்பெரும் விழா மற்றும் ராமானுஜரின் சதய விழா, கொடியேற்றத்துடன் நேற்று துவங்கியது.திருப்புக்கொளியூர் ஆதீனம் காமாட்சிதாச சுவாமிகள் தலைமை வகித்தார். நேற்று காலை, 6:00 மணிக்கு கணபதி ஹோமம், நவகிரஹ ஹோமம்; காலை, 7:00 மணிக்கு அங்காளபரமேஸ்வரி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. காலை, 8:30 மணிக்கு, கொடியேற்றம், அதை தொடர்ந்து அன்னதானம் நடந்தது.விழாவில் இன்று காலை, சுதர்சன ஹோமம், ராமானுஜர், நம்மாழ்வார், மதுரைகவி ஆழ்வார், சீனிவாசன பெருமாள் ஸ்ரீதேவி பூதேவி சிறப்பு திருமஞ்சனமும், மகா தீபாராதனையும், அன்னதானமும் நடைபெறுகிறது. நாளை காலை, கணபதி ஹோமம், விநாயகர் அபிஷேக பூஜை, அங்காளம்மன் நித்யபூஜை, தொந்தி விநாயகர் கோவிலில் இருந்து, 51 வகையான
சீர்வரிசை மற்றும் முளைப்பாரி எடுத்து வரும் நிகழ்ச்சி, ராமானுஜர் புறப்பாடு, 21 சிவன் கோவில்கள்; 21 திவ்ய தேசங்கள் மற்றும் ஒன்பது அம்மன் கோவில்களில் இருந்து எடுத்துவரப்பட்ட தீர்த்த அபிஷேகம் உள்ளிட்டவை நடைபெறுகிறது.