உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / புது வருடபிறப்பை முன்னிட்டு பஞ்சாங்கம் படிக்கும் நிகழ்ச்சி

புது வருடபிறப்பை முன்னிட்டு பஞ்சாங்கம் படிக்கும் நிகழ்ச்சி

புதுச்சேரி: புது வருடபிறப்பை முன்னிட்டு எல்லைப்பிள்ளை  சாவடியில் உள்ள சாரதாம்பாள் கோவிலில் புது பஞ்சாங்கம்  படிக்கும் நிகழ்ச்சி நடந்தது. சாரதாம்பாள் கோவி லில் நடந்த
நிகழ்ச்சிக்கு செயலாளர் ராமகிருஷ்ணன் தலைமை தாங்கி னார். தலைவர் ஜகன்நாதன் வரவேற்றார். பிரம்மஸ்ரீ கீதாராம சாஸ்திரிகள் நவக்கிரக பூஜை மற்றும் பஞ்சாங்க பூஜைகள் செய்து புதுவருட பிறப்பை முன்னிட்டு 12 ராசிகளுக்கான புதிய பஞ்சாங்கத்தை படித்தார். பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ராஜ்குமார்,
சந்திரமோகன் மற்றும் கோவில் கமிட்டி உறுப்பினர்கள்  செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !