புனித வெள்ளியை முன்னிட்டு சிறப்பு பிரார்த்தனை, ஊர்வலம்
ADDED :3105 days ago
தர்மபுரி: புனித வெள்ளியை முன்னிட்டு, தர்ம புரியில், இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையும் நிகழ்ச்சி நடந்தது. புனித வெள்ளியை முன்னிட்டு, தர்மபுரி தனியார் பள்ளியான, அமலா பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில், இயேசு சிலுவையில் அறையும் நிகழ்ச்சி நடந்தது. பின், அமலா பள்ளியில் இருந்து, இயேசு கிறிஸ்துவை ஊர்வலமாக தாங்கி, தர்மபுரி அரசு மருத்துவமனை, பிடமனேரி பிரிவு சாலை, நான்கு ரோடு வழியாக, பழைய பென்னாகரம் சாலையில் உள்ள, ஆர்.சி., சர்ச்சுக்கு வந்தது. பின், திரளான கிறிஸ்தவர்கள் பங்கேற்று, பிரார்த்தனை செய்தனர். தூய
இருதாலய பேராயர் மருதமுத்து தலைமை வகித்தார். வரும் ஞாயிறு அன்று நடக்க உள்ள, ஈஸ்டர் சண்டேவில், திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொள்ள வேண்டுகோள் விடுத்துள்ளார்.