உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / புனித வெள்ளியில் சிலுவை சுமக்கும் நிகழ்வு

புனித வெள்ளியில் சிலுவை சுமக்கும் நிகழ்வு

கிருஷ்ணகிரி: புனித வெள்ளியை முன்னிட்டு, கிருஷ்ணகிரி தூய  பாத்திமா அன்னை ஆலயத்தில், சிலுவை சுமக்கும் நிகழ்ச்சி நடந்தது. நேற்று காலை, 7:00 மணிக்கு கிருஷ்ணகிரி தூய பாத்திமா அன்னை ஆலயத்தில், புனித வெள்ளி பெரிய சிலுவைப்பாதை நடந்தது. திருத்தலத்தின் பங்குத்தந்தை தேவசகாயம் தலைமை வகித்தார். ஆலய வளாகத்தை சுற்றி
அமைக்கப்பட்டிருந்த, 14 சிலுவைப்பாதை ஸ்தலங்களின் முன்பாக, இயேசுநாதர் சிலுவையை சுமந்து சென்றதன் நினைவாக, கிறிஸ்தவர்கள் தங்களுடைய தோல்களில், சிலுவையை சுமந்து தங்களை வருத்திக் கொள்ளும் நிகழ்வு நடந்தது. ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர். இதே போல கந்திகுப்பம், சுண்டம்பட்டி, எலத்தகிரி, ஓசூர், சூளகிரி, தேன்கனிக்கோட்டை என மாவட்டம் முழுவதும் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில், பெரிய
சிலுவைப்பாதை சிறப்பு வழிபாடு நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !