உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மத்தாளக்கோம்பு ஊற்றில் நீரில்லை: கோவில்களுக்கு புனித தீர்த்தம் எடுப்பதில் சிக்கல்

மத்தாளக்கோம்பு ஊற்றில் நீரில்லை: கோவில்களுக்கு புனித தீர்த்தம் எடுப்பதில் சிக்கல்

கோபி: கோபி அருகே, மத்தாளக்கோம்பு குளத்தில், ஊற்று  குறைந்ததால், கோவில்களுக்கு புனித தீர்த்தம் எடுப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டம், கோபி அருகே பங்களாப்புதூரை அடுத்து, டி.என்.பாளையம் செல்லும் வழியில், வயல்வெளிகளுக்கு நடுவே
மத்தாளக்கோம்பு விநாயகர் கோவில் உள்ளது. பவானி ஆற்றங்கரை ஓரமாக அமைந்துள்ள கோவில் அருகே, பல ஆண்டுகளுக்கு முன், நீரூற்று உருவானது. ஊற்றை சுற்றி படிக்கட்டுகள் அமைத்து, குளம் உருவாக்கப்பட்டது. கோவிலின்  அக்னி மூலையில் அமைந்துள்ள இக்குளம், அக்னி தீர்த்தம், ருத்ர தீர்த்தம் என போற்றப்படுகிறது. இந்த குளத்து நீரை, கொங்கர்பாளையம், டி.என்.பாளையம், பங்களாப்புதூர்,  புஞ்சைதுறையம்பாளையம் பகுதியை சேர்ந்தவர்கள், அபிஷேகம், கலச பூஜை, கும்பாபிஷேகம் உள்ளிட்ட நிகழ்வுகளுக்கு புனித நீராக பயன்படுத்துகின்றனர். இக்குளத்தில், கடந்த சில  மாதங்களாக ஊற்றுநீர் பெருக்கெடுக்கவில்லை. தண்ணீரின் அளவு, அரை அடிக்கும் குறைவாக உள்ளது. இதனால் கோவில் விஷேசங்களுக்கு தீர்த்தம் எடுக்க தட்டுப்பாடு ஏற்பட்டு, அப்பகுதி  பக்தர்கள் கவலையடைந்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !