உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மழை வேண்டி சிறப்பு தொழுகை நடத்திய முஸ்லிம்கள்

மழை வேண்டி சிறப்பு தொழுகை நடத்திய முஸ்லிம்கள்

நாமக்கல்: நாமக்கல் - சேலம் சாலையில் உள்ள, ஈத்கா மைதானத்தில், பேட்டை பள்ளிவாசல் முத்தவல்லி ஷேக்நவீத் தலைமையில், மழை வேண்டி நேற்று காலை, 7:00 மணிக்கு சிறப்பு தொழுகை நடத்தப்பட்டது. கோட்டை பள்ளிவாசல் முத்தவல்லி சபியுல்லா, நேதாஜிநகர் பள்ளிவாசல் முத்தவல்லி குலாப்ஜான், பள்ளிவாசல்களின் இமாம்கள் சாதிக், இப்ராகிம், மன்சூர் உள்ளிட்ட பலர் பங்கேற்று சிறப்பு தொழுகை நடத்தினர். நாமக்கல் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த, 300க்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் பங்கேற்று மழை வேண்டி சிறப்பு தொழுகை நடத்தினர். அப்போது, மழை வேண்டியும், மழையால் தண்ணீர் கிடைத்து, மக்களின் தண்ணீர் பற்றாக்குறையும், விவசாயம் செழிக்கவும் தொழுகை நடத்தப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !