மானாமதுரையில் சித்திரை திருவிழா ஏப். 30ல் துவக்கம்
ADDED :3117 days ago
மானாமதுரை: மானாமதுரை ஆனந்தவள்ளி அம்மன், சோமநாதர் கோயில் சித்திரை திருவிழா ஏப்., 30 காலை கொடியேற்றத்துடன் துவங்குகிறது. இந்த விழா தொடர்ந்து 10 நாட்கள் நடக்கும். ஒவ்வொரு நாளும் அம்மன், சுவாமி பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி நான்கு ரத வீதிகளில் உலா வருவர். இரவில் வைகை ஆற்றில் மண்டகப்படிதாரர் சார்பில் கலைநிகழ்ச்சி நடக்கும். மே 7 காலை 11:00 மணிக்கு திருக்கல்யாணம், மே 8 காலை 9:00 மணிக்கு தேரோட்டம் நடக்கின்றன. மே 9 ல் தீர்த்தவாரியுடன் விழா முடிவடைகிறது. விழா ஏற்பாடுகளை தேவஸ்தான மேலாளர் இளங்கோ, கண்காணிப்பாளர் முருகேசன், பரம்பரை ஸ்தானீகர் அழகிய சுந்தரபட்டர் செய்து வருகின்றனர்.