உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு தேவாலயத்தில் சிறப்பு திருப்பலி

ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு தேவாலயத்தில் சிறப்பு திருப்பலி

விழுப்புரம்: ஈஸ்டர் பண்டிகையை யொட்டி, விழுப்புரத்தில் உள்ள தேவாலயங்களில் இயேசு உயிர்த்தெழும் நள்ளிரவு திருப்பலி நடந்தது.

ஈஸ்டர் பண்டிகையை யொட்டி விழுப்புரம் கிழக்கு பாண்டி ரோட்டில் அமைந்துள்ள கிறிஸ்து அரசர் தேவாலயத்தில் நேற்று முன்தினம் நள்ளிரவு 12.00 மணிக்கு புனித வெள்ளியன்று சிலுவையில் அறையப்பட்ட இயேசு மீண்டும் உயிர்த்தெழும் காட்சிகள் காண்பிக்கப்பட்டது. பின்னர் 12.15 மணிக்கும், காலை 6.00 மணிக்கும் சிறப்பு கூட்டு திருப்பலிகள் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு, சிறப்பு ஜெபம் செய்தனர். இதே போல், சி.எஸ்.ஐ., தேவாலயம், புனித சவேரியர், புனித ஜென்மராக்கினி உள்ளிட்ட தேவாலயங்களிலும் சிறப்பு பிரார்த்தனைகள் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !